தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முறைகேடு கேகாலை பரீட்சை நிலையத்தில் விசாரணை ஆரம்பம்

 

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்ற கேகாலை பரீட்சை நிலையம் ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் பரீட்சை திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்

ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இந்த விடயம் தொடர்பில் உரிய வலய கல்வி பணிமனை மட்டத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்

குறித்த பரீட்சை நிலையத்தில் மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வினாத்தாள் வழங்கப்பட்டு உரிய நேரத்துக்குள் மீள சேகரிக்கப்பட்டதாக மாணவர்களும் பெற்றோரும் குற்றம் சாட்டியிருந்தனர்

இது தொடர்பில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது

அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறான சம்பவங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்



Post a Comment