மறைந்திருந்த கொலைக்காரர்கள் - CID இன் வியூகதில் சிக்கிய நபர்கள்
மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி கடான பொலிஸ் பிரிவில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதற்கமைய, புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இக்கொலையைச் செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும், அதற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேகநபர்களும் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23, 47 மற்றும் 49 வயதுடைய கதிரான, ஏத்துக்கால மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கடான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
