பழைய விலைதான் - போலிச் செய்தியை நம்பாதீர்கள்

பால் மா, திரவப் பால் மற்றும் தயிர் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பால் மா, தயிர் மற்றும் திரவப் பால் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை. உறுதிப்படுத்தப்படாத மற்றும் போலிச் செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறான போலித் தகவல்கள் நுகர்வோரிடையே தேவையற்ற பீதியையும், சந்தையில் தவறான புரிதலையும் ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முறையீடு செய்ய: சந்தையில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது அநீதிகள் நிலவினால், 1977 என்ற நுகர்வோர் அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொண்டு அதிகாரசபைக்குத் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Post a Comment