பொலிஸாரிடம் கைவரிசையை காட்டிய நபர்
கேகாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய, நேற்று (29) பிற்பகல் வேளையில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அதிகாரிகளைத் தாக்கியமை தொடர்பாக நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
