காதுப் பகுதியை இலக்கு வைத்த கைதி

பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கு இருந்த பிறிதொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் தாக்கி வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த கைதி தற்போது களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன், பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பிற்கு மத்தியில் சிகிச்சைப் பெற்று வருகிறார். குறித்த கைதி இன்று (30) காலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அதன் பின்னரே, அவர் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்படுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment