பால் மா, யோகட் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய் என நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பால் மா கிலோ ஒன்றின் விலை 260 ரூபாவினாலும், யோகட் ஒன்றின் விலை 20 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளதாக 'Breaking News' என்ற பெயரில் போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
'வெறுமனே Braking News என்ற லேபிள் ஒட்டப்படுவதால் மட்டும் ஒரு செய்தி உண்மையாகிவிடாது' என்று எச்சரித்துள்ள அதிகாரசபை, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்றி இதுபோன்ற வதந்திகளைப் பகிர வேண்டாம் எனப் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
விலை மாற்றங்கள் குறித்து சந்தேகம் இருந்தால், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற அவசர இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
