நுவரெலியாவில் இடம்பெற்ற துயரச் சம்பவம் ஒன்று பெருந்தோட்டப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுவரெலியா, லவ்வர்ஸ் லீப் (Lovers Leap) தோட்டத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறு காரணமாக 43 வயதுடைய பெண் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவன் மனைவியை கோடரியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பெண் நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் நுவரெலியா விநாயகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்திய கணவனை நுவரெலியா காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
