விபத்தில் பறிபோன பிஞ்சு உயிர் - துடிதுடித்துப்போன குடும்பத்தினர்

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்து ஒன்று 15 வயது சிறுவனின் உயிரைப் பறித்துள்ள சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது.

பியகம - சப்புகஸ்கந்த வீதியில் சமூர்தி மாவத்தைக்கு அருகில் சனிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சப்புகஸ்கந்த நோக்கிப் பயணித்த கெப் (Cab) ரக வாகனம் ஒன்றின் ஓட்டுநர், கட்டுப்பாட்டை இழந்ததில் வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்த இருவரும் உடனடியாக கிரிபத்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொணவல பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மற்றொரு சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வாகனத்தின் ஓட்டுநரை சப்புகஸ்கந்த காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment