ஏ ஐ தொழிநுட்பத்தை பயன்படுத்தி தாய் மற்றும் சகோதரனை கொலை செய்த சிறுவன் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யயப்பட்டவர் 17 வயதுடைய இந்திய வம்சாவளி சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான 'கோட்பாட்டு யோசனைகள் அல்லது கற்பனைக் கதைகளை' ஆராய்வதற்காக அவர் இதற்கு முன்பு ChatGPT-Ig; பயன்படுத்தியதாக அந்நாட்டு அரசுத் தரப்பு சட்டத்தரணி வெளிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் ஆக்டனில் உள்ள தங்களது வீட்டில், 45 வயதான தனது தாயார் சுதா வெங்கடேசன் மற்றும் 14 வயது சகோதரர் சித்தார்த் அரவிந்த் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டதை தொடர்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரவிந்தின் தந்தையால் தனது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாததால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
.jpg)