மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் உள்ள மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில், 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று (15) பிற்பகல் மாஓயாவில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதன்போது, இருவரை பிரதேசவாசிகள் மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மீரிகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, நீரில் மூழ்கி காணாமல் போன மற்றைய இளைஞரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீரிகம பொலிஸார், பொலிஸ் உயிர் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் மூன்று இளைஞர்களுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
.png)