நவகிரகங்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவது வழக்கம். ஜோதிடத்தில் புதன் மற்றும் குருபகவான் இருவரும் சுப கிரகங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த இரு சுப கிரகங்களும் ஒன்று சேர்ந்து சக்தி வாய்ந்த இணைவை உருவாக்குகின்றன. இந்த இணைவு சில ராசிகளுக்கு தொழில், பணம் மற்றும் உறவுகளில் நல்ல மாற்றங்களை தரலாம் என கூறப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு இந்த கிரக சேர்கை புதிய வாய்ப்புகளை கொண்டு வரும். வேலையில் முன்னேற்றம் மற்றும் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் இவர்கள் அதிக தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். சமூகத்தில் மரியாதையும் கவனமும் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறலாம். முதலீடு செய்ய ஏற்ற காலம் இது. வாழ்க்கையில் இருந்த பல பிரச்சனைகள் தீர்ந்து வாழ்கைத்தரம் உயரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் குரு இணைவு பல நல்ல பலன்களை தரப்போகிறது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய பொறுப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் வரலாம். சமூகத்தில் பெயரும் அங்கீகாரமும் கூடும். வேலை மற்றும் தொழிலில் வெற்றி உறுதி. குருவின் செல்வாக்கால் தன்னம்பிக்கை அதிகரித்து புதிய திட்டங்களை வெற்றிகரமாக தொடங்க முடியும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தவும் இது நல்ல நேரம். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்கு இந்த சேர்க்கையால் வேலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். அதிர்ஷ்டம் ஒத்துழைக்கும். வெளிநாடு செல்லும் வாய்புகள் கூட உருவாகலாம். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் இருந்த நீண்ட நாள் பிரச்சனைகள் சரியான திட்டமிடலால் தீரும். வேலை இடத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். ஆரோக்கியமும் இந்த காலத்தில் நன்றாக இருக்கும்.
