போதனா வைத்தியசாலையின் காணாமல்போன வைத்தியர் சற்று முன் சடலமாக மீட்பு{காணொளி}

  

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிவந்த, காணாமல்போயிருந்த மயக்கவியல் வைத்தியர் ஒருவரின் சடலம் இன்று (24)  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

49 வயதான குறித்த வைத்தியரின் சடலம், மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாபாகட, 17ஆம் கட்டை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை, மாபாகட, 17ஆம் கட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சென்று சோதனையிட்டுள்ளனர்.

கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் உள்ள புதர் பகுதியில் இருந்து வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், சடலத்திற்கு அருகில் இருந்து சில மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வைத்தியர் நேற்று (23) முதல் காணாமல்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment