எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் சிறப்பு மக்கள் பேரணித் தொடரொன்று நடத்தப்படவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த பேரணி நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறையில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
'தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், கிராம மட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் தேர்தல் குழுக்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.
இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 05 ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் தலைமையில் மாவட்ட ரீதியில் தொடர் மக்கள் பேரணிகள் ஆரம்பமாகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்..
