பெல்லன்வில ரஜமகா விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹரவை முன்னிட்டு, நாளை (13) முதல் 15 ஆம் திகதி வரை பல முக்கிய வீதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
எனவே, தாமதங்களைத் தவிர்ப்பதற்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, ஓகஸ்ட் 13 ஆம் திகதி மாலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 119 மகரகம - தெஹிவளை பேருந்து வழித்தடத்தில் பொரலஸ்கமுவ நகரம் மற்றும் பெல்லந்தர சந்திக்கு இடையில் போக்குவரத்து தடைப்படும் என அறிவிக்ககப்பட்டுள்ளது.
மஹரகம அல்லது பிலியந்தலையிலிருந்து தெஹிவளை நோக்கிச் செல்லும் வாகனங்கள் பெப்பிலியனை சந்திக்குச் சென்று, அங்கிருந்து வலதுபுறம் திரும்பி ஸ்பார் சுற்றுவட்டம் ஊடாக பெல்லந்தரவிற்;குச் சென்று, நெதிமால வழியே தெஹிவளையை அடையலாம்.
பொரலஸ்கமுவவை காலி வீதியுடன் இணைக்கும் மாற்று வழியாக வெரஹெர சந்தி முதல் கொலுமடம சந்தி வரை கங்காராம வீதியைப் பயன்படுத்தலாம்.
ஓகஸ்ட் 14 ஆம் திகதி ரன்சிவிலி பெரஹெர இரவு 8.00 மணி முதல் ஓகஸ்ட் 15 ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை நடைபெறவுள்ளது.
119 மகரகம - தெஹிவளை வழித்தடத்தில் பொரலஸ்கமுவ சந்திக்கும் பெல்லந்தர சந்திக்கும் இடைப்பட்ட பகுதிக்கான மாற்று வழியாக தெஹிவளையிலிருந்து மஹரகம நோக்கிச் செல்லும் வாகனங்கள் பெல்லந்தர சந்தியில் இடதுபுறம் திரும்பி 117 வழித்தடம் ஊடாக பெப்பிலியனை அடைந்து, பின்னர் வலதுபுறம் திரும்பி பொரலஸ்கமுவவைச் சென்றடையலாம்.
தெஹிவளை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் பிலியந்தலை - கட்டுபெத்த வழித்தடத்தைப் பயன்படுத்தி காலி வீதியை அடையலாம்.
மஹரகமவிலிருந்து தெஹிவளை நோக்கிச் செல்லும் இலகுரக வாகனங்கள் மலானி புளத்ஹிம்ஹல வீதி, பிடவெல்ல வீதி மற்றும் கஹவத்த மாவத்தை ஆகியவற்றைப் பயன்படுத்தி 117 வழித்தடத்தை அடையலாம்.
ஓகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள ரந்தோலி மகா பெரஹெர இரவு 8.00 மணி முதல் ஆகஸ்ட் 16 அதிகாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளமையினால், மஹரகம மற்றும் பிலியந்தலையிலிருந்து தெஹிவளை நோக்கிச் செல்வோருக்காக கொ{ஹவல சந்தி மற்றும் கொ{ஹவல - களுபோவில வீதி ஊடாக காலி வீதியை அடையலாம்.
களுத்துறை, இரத்மலானையிலிருந்து மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நோக்கிச் செல்லும் வாகனங்கள் அத்திட்டிய பேக்கரி சந்தி, காலி வீதி மற்றும் கொஹுவளை ஊடாகச் செல்லலாம்.
தெஹிவளையிலிருந்து பெப்பிலியனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் நெதிமால சந்தியிலிருந்து ஆண்டர்சன் வீதியைப் பயன்படுத்தி கொஹவளை ஊடாக கொழும்பு, பொரலஸ்கமுவ அல்லது நுண்கொடவை அடையலாம்.
கொரனை, பிலியந்தலை, கேஸ்பெவ மற்றும் மகரகமவிலிருந்து காலி வீதிக்குச் செல்லும் கனரக வாகனங்கள் கொ{ஹவல - களுபோவில வீதியைப் பயன்படுத்தலாம்.
கொழும்பிலிருந்து பொரலஸ்கமுவ ஊடாக பெப்பிலியனை அல்லது காலி வீதிக்குச் செல்லும் கனரக வாகனங்கள் பிலியந்தலை சந்தி மற்றும் கட்டுபெத்த வீதி ஊடாகச் சென்று கட்டுபெத்த சந்தியில் காலி வீதியை அடையலாம்.
பெரஹர நடைபெறும் மூன்று நாட்களிலும் வாகன ஓட்டிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, பரிந்துரைக்கப்பட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
.png)