பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

 

கற்பிட்டிய, குரக்கன்ஹென பிரதேசத்தில் உள்ள உப்பளத்தில் குடும்பத்தினருடன் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

நேற்றைய தினம் (11) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 7 வயது சிறுவனும், 13 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.

முற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த குடும்பத்தினர் மீன்பிடி வலைகளை சேகரிப்பதற்காக படகில் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்தில் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன், அவர்களது தந்தை மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கற்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கைதடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை, சார்ட்டி கடற்கரைப் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த 52 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பில் கைதடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Post a Comment