கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு இஷாரா செவ்வந்தியின் சூட்கேஸ் கைப்பற்றல்

 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் சூட்கேஸ் ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக நீதி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பெண் கைதிகளை சிறைக்கு அழைத்து வரும் போது அவர்களுக்கு கைவிலங்கு போடுவதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

மேலும் இஷாராவை சிறைக்கு கொண்டு செல்லும் போது எந்த சட்டவிரோத செயலும் நடக்கவில்லை. அதனால் தனி விசாரணை தேவையில்லை எனவும் கூறினார்.

தற்போது அவர் அங்குனுகொலப்பெலஸ்ஸ சிறையில் ஏனைய சந்தேகநபர்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை அங்குனுகொலப்பெலஸ்ஸ சிறையில் உள்ள பல கைதிகள் இஷாரா செவ்வந்தி பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் சிறை அதிகாரிகள் அவரை மிகவும் உன்னிப்பாக கண்காணிப்பதால் அவருடன் அதிகமாக தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Post a Comment