தலைமன்னார் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

 

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மீன்பிடி துறையை அண்டிய கடற்கரையில் அடையாளம் காண முடியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை கரை ஒதுங்கியுள்ளது.

மீன்பிடி வலையினால் சுற்றப்பட்ட நிலையில் சிதைவடைந்த சடலமாக இது காணப்பட்டது.

குறித்த பகுதியில் கடமையில் இருந்த கடற்படையினர் இன்று காலை சடலத்தை அவதானித்து தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட சடலம் மேலதிக நடவடிக்கைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment