முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் இன்று காலை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களைத் தனது தனிப்பட்ட பணியாளர் குழாமில் இணைத்துக் கொண்ட குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
