கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 05 கொலை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
