முஸ்லிம் ஒருவர் ஏன் நியமிக்கப்படவில்லை

 


நிர்வாக எல்லைகளை வரையறுக்கும் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் ஏன் முஸ்லிம்கள் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் நிலையியல் கட்ளைச்சட்டம் 27 கீழ் 02 கட்சி தலைவர்களுக்கான சிறப்புரிமையின் கீழ் இந்த கேள்வியினை அவர் முன்வைத்தார்.

நாட்டில் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரிய விடயங்களாக காணப்படுகின்ற போதிலும் சில வி;டயங்கள் முஸ்லிம்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆகையினால் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு மேலதிகமாக முஸ்லிம் ஒருவரையும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு நியமிக்க முடியுமா என பிரதமர்  ஹரினி அமரசூரியவிடம் வினாவெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம், மிகவும் நுட்பமாக அணுகப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இந்த நியமனம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவில் மதம் மற்றும் மொழிக்கு இடமில்லை. புள்ளிகள் அடிப்படையில் உறுப்பினர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர். என்றார்.

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களை பிரதிபலிக்கின்ற வகையில் முஸ்லிம் நியமனம் ஒன்று அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

Post a Comment