கடல் கொந்தளிப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக சிலாபம் வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும். அத்துடன் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.

நீர்கொழும்பு முதல் காலி மற்றும் மாத்தறை வழியாக பொத்துவில் வரையிலான கடலோர பகுதிகளில் கடல் அலைகள் 2.5 முதல் 3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியம் உள்ளது.

மேலும் இந்த கடலோர பகுதிகளில் அலைகள் கரையை நோக்கி வரவும் வாய்ப்பு இருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுகொண்டுள்ளது.


Post a Comment