இந்தக் கொலை கரந்தெனிய சுத்த என்பவரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது இடம்பெற்றிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது தாயார் கொல்லப்பட்ட செய்தி சிறைச்சாலை அதிகாரிகளால் பெக்கோ சமனுக்கு அறிவிக்கப்பட்டபோதும், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பெக்கோ சமனின் நலன் குறித்து விசாரிக்க சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டாம் என அவரது தாயாருக்கு 'சுத்த' அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அந்த அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் அவர் சிறைச்சாலைக்குச் சென்று வந்ததாகவும், இந்தப் பின்னணியும் கொலைக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் எனவும் விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தனது தாயின் இறுதி அஞ்சலிக்கு பெக்கோ சமன் ஏன் செல்ல மறுத்தார்?
இதற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை
.png)