நடுத்தர காலத்தில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகம் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை

 

நடுத்தர காலத்தில் பொருளாதார கண்ணோட்டத்தில் அதிக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை 13ஆம் திகதி இரவு வெளியிடப்பட்ட சமீபத்திய நாணயக்கொள்கை அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

நிச்சயமற்ற தன்மைக்கான காரணங்கள்

1.  புவிசார் அரசியல் போக்குகளின் தாக்கம்

2.  மாறிவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழல்கள்  

3.  காலநிலை அபாயங்கள்

அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடிகள் உலகளாவிய எரிசக்தி சந்தைகள், வர்தக பரிமாற்றங்கள், விநியோக சங்கிலிகள் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை ஆகியவற்றை பாதிக்கக்கூடும்.

அதன் மறைமுக விளைவுகள் இலங்கையின் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment