கிராம உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று 17ஆம் திகதி கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகளுக்கும் பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் பேச்சுவார்தை இடம்பெற்றது. அதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாகவும், அவர்களின் கோரிக்கைகளை அடுத்த வரவு செலவு திட்டத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாகவும் சங்க பிரதிநிதிகள் கூறினர்.
இதனை அடுத்து தற்போது ஆரம்பிக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இன்று முதல் அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வழமை போல் கடமைகளில் ஈடுபடுவார்கள் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
