இந்த சம்பவம் இரத்தினபுரியில் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரியில் இயங்கும் நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களை தகாத முறையில் புகைப்படங்களைப் பெற முயன்ற நபர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றிலை முன்னிலைப்படுத்தப்பட்ட போது குற்றத்தை ஒப்புக் கொண்டமையினால் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியராகும்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கழிவறையில் துளைகளில் ஒட்டப்பட்டிருந்த காகிதங்களை பிரித்த போதே குறித்த கையடக்க தொலைபேசி மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்ட தாக தெரிவிக்கப்படுகின்றது.
