நீண்ட நாட்களாக ஏழைகளை ஏமாற்றிய நபர்-இறுதியாக செய்த காரியம்

 

இஸ்ரேலின் கட்டுமான மற்றும் ஹோட்டல் துறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, நிதி மோசடியில் ஈடுப்ட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்குள், பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் தலையீட்டுடன் வழங்கப்படும் இஸ்ரேலின் கட்டுமான மற்றும் உணவகத் துறை வேலைகளைத் தங்களால் வழங்க முடியும் என குறித்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலின்படி செயற்பட்ட விசாரணை அதிகாரிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து இந்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் புத்தலப் பிரதேசத்தைச் சேர்ந்த, சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் என்பதோடு, மற்றைய சந்தேக நபர் பெலியத்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்களிடம் இருந்த 7 கடவுச்சீட்டுகள் மற்றும் இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தப் பத்திரங்கள் என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Post a Comment