கம்பஹா வெயங்கொடையில் வேன் விபத்து இருவர் உயிரிழப்பு

 

கம்பஹா வெயங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்கம்பம் ஒன்றில் வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் வேனின் சாரதியான 21 வயதான நவோத் சதுரங்க மற்றும் அவரது பாட்டியான 80 வயது மூதாட்டி டபிள்யூ ஏ விக்கிரமாராச்சி ஆகியோர் உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மணப்பெண்ணின் சகோதரர் வேனை செலுத்திச் சென்றுள்ளார். மணப்பெண்ணின் பாட்டி, தாய், தந்தை உட்பட 9 பேர் அந்த வேனில் பயணித்துள்ளனர்.

இருவர் உயிரிழந்த நிலையில் வேனில் பயணித்த மேலும் 7 பேர் காயமடைந்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்ப விசாரணைகளில் சாரதி வாகனத்தை செலுத்தும் போது உறங்கி விட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Post a Comment