பொலிஸை நவீனமயப்படுத்துங்கள் - ஜனாதிபதி அநுர உத்தரவு

 

பொதுமக்களுக்கு தரமான சேவை வழங்கும் நோக்கில் இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல் பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

நேற்று 06.08.2025 ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த 2026-2027 வரவு செலவு மீளாய்வு கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, "முழு நாடுமே ஒன்றாக" போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்பாட்டுக்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என வலியுறுத்தினார்.

*முக்கிய தீர்மானங்கள்:*

1.  *போதைப்பொருள் ஒழிப்பு*: இதற்காக ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபாவில், பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துக்கு 417.48 மி, தேசிய ஆபத்தான ஔடதங்கள் சபைக்கு 288.15 மி, கல்லடி பயிற்சி மையத்தை புனர்வாழ்வு மையமாக மாற்ற 13.54 மி ஒதுக்கப்பட்டுள்ளது.

2.  *பொலிஸ் உட்கட்டமைப்பு*: நாடு முழுவதும் 608 வாடகை பொலிஸ் நிலையங்களுக்கு பதிலாக நிரந்தர கட்டிடங்கள். வெலிகம, முல்லைத்தீவு நிலையங்கள் விரைவில் திறப்பு. புதிய பொலிஸ் தலைமையகம், மிரிஹான விளையாட்டு வளாகம்.

3.  *வசதிகள்*: 20 வருடங்களுக்கு மேலான பொலிஸ் வாகனங்களுக்கு பதில் புதிய வாகனங்கள். பொலிஸ் மருத்துவமனை அபிவிருத்தி. டிஜிட்டல் மயமாக்கல், சீருடை மாற்றம்.

4.  *நலன்புரி*: பொலிஸ் அதிகாரிகளின் உடல்நல பிரச்சனைகளை தடுக்க புதிய திட்டம். போதைக்கு அடிமையானவர்களுக்கு 3 மாத குடும்ப ஆலோசனை திட்டம் வெற்றி.

சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்களை தேசிய திட்டங்களில் இணைக்க புதிய திட்ட முன்மொழிவை சமர்பிக்குமாறும் ஜனாதிபதி பணித்தார்.



Post a Comment