இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 4 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு சிறையில் ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று 07.08.2025 காலை மீண்டும் கைதிகளால் பதற்றம் உருவாக்கப்பட்டது.
நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகித்தனர். காயமடைந்த 4 கைதிகளும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
2ம் இணைப்பு
சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினருடன் விசேட அதிரடிப்படையினரும் கலகத் தடுப்புப் பிரிவினரும் தொடர்ந்தும் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
