ஜம்மு காஷ்மீரில் கணவரை சிக்கவைக்க மனைவி சதி கோழிதீவனம் என கூறி போதைபொருள் கூரியர்

ஜம்மு காஷ்மீரில் 28 வயதான கோழிபண்ணை உரிமையாளரை சிறையில் அடைக்க திட்டமிட்டு அவரது மனைவி தனது கள்ளகாதலனுடன் இணைந்து போதைபொருட்களை கூரியர் மூலம் அனுப்பிய சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது

குறித்த இளைஞர் கோழிபண்ணை நடத்துவதுடன் இறைச்சி கடையையும் நடத்தி வருகிறார் திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

சம்பவத்தன்று கான்பூரிலிருந்து அவரது முகவரிக்கு வந்த கூரியர் பார்சலை திறந்து பார்த்தபோது சுமார் 4 கிலோ கொக்கைன் 80 கிராம் சரஸ் மற்றும் தடைசெய்யப்பட்ட மனநல மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் என கூறப்படுகிறது

இரகசிய தகவலின் அடிப்படையில் கந்தர்பால் பொலிஸார் சென்று பார்சலை கைப்பற்றியதுடன் கோழிபண்ணை உரிமையாளரையும் விசாரணைக்கு உட்படுத்தினர் தனக்கு பார்சலில் போதைபொருள் இருப்பது தெரியாது எனவும் சவுதி அரேபியாவிலிருந்து அழைத்த ஒருவர் குறைந்த விலையில் கோழி தீவனம் தருவதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்

விசாரணையில் மனைவியின் தொலைபெசி விபரங்களை பொலிஸார் ஆய்வு செய்தபோது திருமணத்திற்கு முன்னரே ஸ்ரீநகர் ஜைனகோட் பகுதியை சேர்ந்த 51 வயது அரசு ஊழியர் தாரிக் அகமது சோஃபியுடன் அந்த பெண்ணுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது பெற்றோர் வற்புறுத்தலால் கோழிபண்ணை உரிமையாளரை திருமணம் செய்ததாகவும் பின்னரும் காதலனுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது

கணவரை போதை கடத்தல் வழக்கில் சிக்கவைத்து நீண்ட காலம் சிறையில் அடைக்க திட்டமிட்டு காதலனின் உதவியுடன் கான்பூரில் உள்ள அரீப் என்பவரை கொண்டு போதைபொருட்களை கோழி தீவனம் என கூறி அனுப்பியதாகவும் பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்து கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்த வழக்கில் கோழிபண்ணை உரிமையாளரின் மனைவி மற்றும் தாரிக் அகமது சோஃபி ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் சம்பவத்துடன் தொடர்புடைய அரீப் சவுதி அரேபியாவுக்கு தப்பி சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதால் அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன

Post a Comment