இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்தியாவில் தஞ்சமடைந்த தமிழர்கள் நாடு திரும்பும் போது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துக்கொடுக்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் இந்த கேள்வியினை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து நாட்டிற்கு திரும்பிய இளைஞர் ஒருவர் பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தார்கள்.
இதனால் தாயகம் திரும்பவிருந்த மேலும் பல அகதிகள் அச்சமடைந்து நாடு திரும்பும் திட்டம் யோசிக்கின்றார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுடைய சனத்தொகை குறைந்துக்கொண்டு போகின்றது. ஆகையினால் தஞ்சமடைந்தவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதனால், குடிப்பரம்பலை அதிகரிக்கலாம் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்க முடியும்.
அதுமாத்திரமின்றி பல தசாப்தங்களாக இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் சேகரித்த சொத்துக்களை கொண்டுவருதற்காக படகு சேவை ஒன்றும் அவசிமாகின்றது. அவர்களின் காணிகள் இராணுவத்தினர வசம் இருந்தால் அதனை விடுவித்து தரவேண்டும். அவர்களுடைய வீடுகள் யுத்தத்தினால் இடிக்கப்பட்டிருந்தால் அதனையும் நிர்மாணித்து கொடுக்க வேண்டும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்கொண்டுவரப்பட வேண்டும்.
இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடரபில் விளக்கமளிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.
