நுவரெலியா மல்லிகைப்பூ தோட்ட அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவும் முயற்சி - பொலிஸாரால் தடுப்பு

 

நுவரெலியா வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட மல்லிகைப்பூ தோட்ட பகுதியில் உள்ள அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை நிறுவ வெளியாட்கள் மேற்கொண்ட முயற்சி பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று 07.08.2026 இரவு 10 மணியளவில் பிரிதொரு பகுதியில் இருந்து வேன், ஆட்டோக்களில் வந்த சிலர் சிலையை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தை அவதானித்த கிராம மக்கள் உடனடியாக ராகலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரின் உதவியுடன் சிலை நிறுவும் முயற்சி தடுக்கப்பட்டது.

குறித்த இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மன் மற்றும் காவல் தெய்வ வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் ராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



Post a Comment