காதலர்கள் போல நாடகமாடி நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 21 வயது தம்பதி ஹோமாகம பிரதேச போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனிமையான வீதிகளில் காதலர்கள் போல பாசாங்கு செய்து போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்களிடம் இருந்து 80 போதை மாத்திரைகள், விற்பனை மூலம் சம்பாதித்த 1000 ரூபா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இளைஞர் இதற்கு முன்னர் மீகொட பொலிஸாரால் போதை கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரியவந்தது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்களுக்கும் இவர்கள் போதை மாத்திரைகளை விற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக பாதுக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
