கடும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலக நிறைவேற்று பொறியலாளர் ஏ.எம். சாதிக், பாதுகாப்பு கருதி குறித்த பகுதியில் வாகன போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், ஹட்டனில் இருந்து கித்துல்கல வரையான வீதியில் பயணிக்கும் சாரதிகள் சீரற்ற காலநிலை காரணமாக மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
