எத்தியோப்பியாவின் அம்மாரா பிராந்தியத்தில் அமைந்துள்ள மலைப்பகுதி கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி காலை, மலை உச்சியில் அமைந்துள்ள வழிபாட்டு தலத்தில் 21 பேர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வேளையில் திடீரென பெய்த கனமழையால் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவின்போது மண் மற்றும் பாறைகள் வழிபாட்டு தலத்தின் மீது சரிந்து விழுந்ததில், அங்கு இருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
