திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திவுல்வெவ மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்ததையடுத்து மாணவர்கள் மீது குளவிகள் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் உடல்நிலை கவனத்துக்குரிய மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
