சீரற்ற வானிலையால் சிவனொளிபாத மலை பாதையில் மண்மேடு சரிவு

 

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சிப் பகுதியில் இருந்து மண்மேடு ஒன்று சரிந்து, மலைக்கு செல்லும் பாதையை மூடியுள்ளது என நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது யாத்திரை காலம் அல்லாததால், உச்சிக்கு செல்ல விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இடிக்கட்டுபான ஊடாக இரத்தினபுரி பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வானிலை சீரடைந்ததும் சரிந்த மண்ணையும் மரங்களையும் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.



Post a Comment