நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற கோரமான வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
யாழ். கரவெட்டியைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் கோகுலதாஸ் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இளம் பொறியியலாளர் கந்தசாமி கோகுலதாஸ் (கோபு) அவர்கள் இன்று 23.08.2026 யாழ். நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற கோரமான வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இளம் வயதில் கல்வியால் உயர்ந்து, பொறியியலாளராக தனது எதிர்காலத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத ஒரு விபத்து அவரது வாழ்க்கைப் பயணத்தை திடீரென முடித்திருப்பது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரை அறிந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு குடும்பத்தின் நம்பிக்கை…
ஒரு தாயின் கனவு…
நண்பர்களின் அன்பான தோழன்…
சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருந்த ஓர் இளம் பொறியியலாளர்…
இன்று ஒரு கணத்தில் இல்லாமல் போய்விட்டார்.
வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திச் செல்கிறது இந்த துயரச் சம்பவம்.
