வறட்சியான காலநிலை காரணமாக சேதமடைந்த நெற்பயிர்களுக்கான நட்டஈட்டு தொகையை விரைவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் கே.டீ. லால் காந்தவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் வறட்சியால் மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அம்பாறை, அனுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் மற்றும் சோளம் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட விவரம்
மொனராகலை 1334 ஏக்கர் 960 விவசாயிகள்
பொலன்னறுவை 1100 ஏக்கர் 560 விவசாயிகள்
அம்பாந்தோட்டை 435 ஏக்கர் 782 விவசாயிகள்
அம்பாறை 1004 ஏக்கர் 505 விவசாயிகள்
அனுராதபுரம் 2200 ஏக்கர் 1900 விவசாயிகள்
இதுவரை மொத்தம் 6073 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 4707 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி விவசாய காப்பீட்டு சபையின் மாவட்ட அதிகாரிகள் சேதமடைந்த வயல்களை நேரில் பார்வையிட்டு பரிசோதிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். நட்டஈடு தொகை விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
நெல், சோளம் உட்பட 6 வகையான பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சம் 100000 ரூபாய் வீதம், அதிகபட்சம் 5 ஏக்கர் வரை நட்டஈடு வழங்கப்படும்.
வறட்சியால் பயிர் சேதமடைந்த விவசாயிகள் உடனடியாக விவசாய காப்பீட்டு சபையின் கள அதிகாரிகளை சந்திக்கவோ, விவசாய அபிவிருத்தி மையங்களில் உள்ள சேத பதிவேட்டில் பதிவு செய்யவோ கேட்டுகொள்ளப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு 1918 என்ற குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.
