நாட்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் இதுவரை மொத்தம் 92 ஆயிரத்து 854 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்த நோயாளிகளில் 52.95 வீதமானோர் அதாவது 49 ஆயிரத்து 163 பேர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியாக பார்தால் கம்பஹா மாவட்டத்தில் அதிகமாக 19 ஆயிரத்து 778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 21.30 வீதமாகும்.
அடுத்து கொழும்பு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 433 பேரும், கண்டி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 695 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதத்தில் மட்டும் 29 ஆயிரத்து 964 நோயாளிகள் பதிவாகி அதிகபட்சமாக பதிவான மாதமாக அமைந்துள்ளது.
ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை கடந்த சில நாட்களிலேயே 7 ஆயிரத்து 516 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதேவேளை 96 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதி அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
