முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (15.08.2026) மாலை பதிவாகியுள்ளது.
சந்தேகநபர்கள் செம்மலை - கொக்கிளாய் வீதியில் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த வேளை பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கையின் போது சிக்கியுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 2 கிராம் அளவிலான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட சான்று பொருளும் கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)