சங்கீதாவை கண்டபடி திட்டிய த்ரிஷா? வைரலாகும் அந்த பரபரப்பு போஸ்ட்!

 நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரையும் நேரடியாக குறிப்பிடாமல், சூசகமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. த்ரிஷா அந்தப் பதிவில் என்ன கூறியிருக்கிறார்? யாரை குறிப்பிட்டு இந்தப் பதிவை வெளியிட்டார்? வாங்க, இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து வழக்கு தொடர்பாக கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. இந்த விவகாரத்தில் நடிகை த்ரிஷாவின் பெயரும் அவ்வப்போது பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது சங்கீதா, விஜய் மீது தொடர்ந்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரண்டு பதிவுகள் வைரலாகி வருவதோடு, இணையத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.


விஜய்க்கு எதிராக சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை அவர் சமீபத்தில் திரும்பப் பெற்றார். இந்த நிகழ்வு நடந்த சில நாட்களிலேயே த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவுகள்தான் தற்போது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. த்ரிஷா பகிர்ந்த முதல் பதிவில், “இந்த வயதில் நாடகம் போடுவது வெட்கக்கேடானது... போய் கொஞ்சம் பணம் சம்பாதித்து, நிம்மதியாக இருங்கள்” என்ற கருத்து இடம்பெற்றிருந்தது. அதனுடன் அவர் ஒரு எமோஜியையும் சேர்த்திருந்தார். ஆனால், இந்தப் பதிவு யாரை மனதில் வைத்து பகிரப்பட்டது என்பது குறித்து த்ரிஷா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

அதேபோல், மற்றொரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியையும் அவர் ரீ-ஷேர் செய்திருந்தார். ‘தீய கண்’ எமோஜியுடன் பகிரப்பட்ட அந்தப் பதிவில், “ஒரு காலத்தில் நீங்கள் வேண்டிக்கொண்ட வாழ்க்கையில் இன்று முழுமையாக மூழ்கிப்போய் இருப்பது எவ்ளோ பெரிய வரம்” என்ற கருத்து இடம்பெற்றிருந்தது. த்ரிஷா போட்ட இந்த இரண்டு பதிவிலும் அவர் யாரையும் குறிப்பிடாவிட்டாலும் தற்போதைய சூழலுடன் அதனை ஒப்பிட்டு, அவர் விஜய் - சங்கீதாவை தான் குறிப்பிட்டுள்ளதாக நெட்டிசன்கள் பல்வேறு யூகங்களை கிளப்பி வருகிறார்கள்.

Post a Comment