சிறைச்சாலை அதிகாரியின் சில்லறைத்தனம்


 வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்ததாகச் சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கல்கிசை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிஸ்ட்டல் மெத்தபெட்டமின் என அழைக்கப்படும் ஐஸ் போதை பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகியன குறித்த அதிகாரியிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பொதிகளின் மொத்த மதிப்பு சுமார் 2 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அதிகாரியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment