கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் முன்பதிவு வசூல் மற்றும் முதல் நாள் வசூல் குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்த யாஷ், தற்போது ‘டாக்சிக்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் பிரம்மாண்டமான பான் இந்தியா படத்துடன் களமிறங்கியுள்ளார்.
கன்னட சினிமாவில் இருந்து வெளியாகும் முக்கிய பான் இந்தியா திரைப்படமாக எதிர்பார்க்கப்பட்ட ‘டாக்சிக்’, வெளியீட்டுக்கு முன்பே முன்பதிவில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், முதல் நாளில் இப்படம் உலகளவில் ரூ.125 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாஷின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்சிக்’, வசூலில் புதிய சாதனையை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
