தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கி வருவதுடன், ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் படம் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் மீது முன்னணி OTT தளங்களும் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதேவேளை, இப்படத்தை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
பிரம்மாண்டம், நகைச்சுவை மற்றும் பேண்டஸி அம்சங்களுடன் உருவாகி வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’, தனது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும் என நயன்தாரா எதிர்பார்ப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராபிக்ஸ் பணிகள் தாமதமானால், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
