சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தற்செயலாக விமானத்தில் சந்தித்த நடிகை கயாடு லோஹர், அந்த அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
விமானப் பயணத்தின்போது எதிர்பாராத விதமாக ரஜினிகாந்தின் அருகிலேயே அமரும் வாய்ப்பு கயாடு லோஹருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்தின் தீவிர ரசிகையான கயாடு லோஹர், “இன்னும் நான் கனவு காண்கிறேன் என்றுதான் நினைக்கிறேன்” என்ற உணர்வுடன் இந்த தருணத்தைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், ரஜினிகாந்தை பார்த்த அந்த நொடியில் ‘சுந்தரி’ பாடல் தனது மனதில் ஒலிக்கத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்பாராத சந்திப்பு தனது நாளையே சிறப்பாக்கிவிட்டதாகக் கூறிய கயாடு லோஹர், ஒருநாள் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
