தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் மூத்த நடிகையாக விளங்கிய சௌகார் ஜானகி (94) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
இந்த சம்பவம் தென்னிந்தியத் திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ICU-வில் சிகிச்சை பெற்று வந்த சௌகார் ஜானகி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:59 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புகழ்பெற்ற நட்சத்திரமான சௌகார் ஜானகி (94) காலமானார். அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செனடாப் சாலையில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
