தென் கொரியாவில் உயிரைக் காப்பாற்றிய இலங்கைத் தொழிலாளர்கள் - கிடைத்த உச்சக்கட்ட கௌரவம்!

தென் கொரியக் கடலில் விபத்துக்குள்ளான போர் விமானத்தின் இரு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் இருவருக்கு தென் கொரிய அரசாங்கம் நீண்டகாலமாகத் தங்கியிருப்பதற்கான விசேட 'திறமையான பணியாளர்' (E-7-4) விசாக்களை வழங்கி கௌரவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற இந்த விபத்தின்போது, கடலில் வீழ்ந்த விமானிகளைத் தங்களது மீன்பிடிப் படகின் ஊடாக மீட்டு இவர்கள் காப்பாற்றியிருந்தனர். 

இவர்களின் இந்த வீரம் மற்றும் தேசிய நலனுக்கான பங்களிப்பைக் கருத்திற்கொண்டு தென் கொரிய நீதி அமைச்சு இந்த விசாக்களை வழங்கியுள்ளது.

ஏற்கனவே இதில் தொடர்புடைய மூன்றாவது இலங்கையருக்கு நீண்டகால வசிப்பிட உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த இருவருக்கும் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் அவர்கள் தென் கொரியாவில் காலவரையறையின்றி தங்கிப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment