நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, இன்று காலை நாமல் ராஜபக்ஷ நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்.
இதன்போது, மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் அதிகாரிகளிடம் வாக்குமூலமளித்த பின்னரே அவர் வளாகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
