இரவல் காணி எமக்கு வேண்டாம் - எமது நிலமே எமக்கு வேண்டும்

 


சொந்தக்காணிகளில் வாழ்வதற்கு இடமளிக்குமாறு கோரி 18 ஆவது வாரமாக இன்றைய தினமும் மயிலிட்டி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டனர்.

வலிகாமம் வடக்கில் பல தசாப்தங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

'அனுரவே எம்மை சொந்த நிலங்களில் வாழவிடு, எத்தனை நாள் தான் நாம் இரவல் இடங்களில் வாழ்வது' என்ற உருக்கமான கோசங்களுடன் முதியவர்கள், தாய்மார் எனப் பலரும் வீதியில் இறங்கித் தமது நீதிக்கான குரலை எழுப்பியுள்ளனர்.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மயிலிட்டி மக்கள், 36 ஆண்டுகளாக அகதிகளாகவும் இரவல் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். 

தமது பூர்வீக நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில், தமது உரிமையை வென்றெடுப்பதற்காக மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

36 வருடகால அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, எந்தவித நிபந்தனையுமின்றி எமது சொந்தக் காணிகளில் மீளக் குடியேற அனுமதிக்க வேண்டும்.

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி (இல. 1810) முற்றாக இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment